Greek Word in Bible (Tamil Meaning)
கிரேக்க
வார்த்தையில் பைபிளில் (தமிழ் பொருள்)
“சம்போனோ” (Sumphoneo)ஒரு மனப்படுதல் (மத் 18:19)
![]() |
“சம்போனோ” (Sumphoneo)
“சம்போனோ” (Sumphoneo) என்னும்
கிரேக்கச் சொல்
தமிழில்
"ஒரு
மனப்படுதல்”
என மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
"சம்"
(sum) மற்றும்
"போனோ”
(Phoneo) என்னும்
இரு கிரேக்க
சொற்கள்
இணைந்த கூட்டு சொல் இது.
சம்
(sum) என்பது 'சேர்த்தல்
அல்லது இனைதல் ' என
பொருள்படும்.
"போனோ” (Phoneo) என்பது
சப்தம்/ இசை/ சுருதி
என
பல பொருள் கொடுக்கும். எனவே “சம்போனோ” என்னும்
கூட்டுச்
சொல்லின் பொருள் "சுருதி சேர்த்தல்" என்பதாகும். மிக
நேர்த்தியாக
பல இசைக்கருவிகளைக் கொண்டு சுருதி
சேர்க்கப்பட்ட
இசை தொகுப்பைக் குறிக்கும். Symphony (சிம்போனி) என்னும்
ஆங்கில சொல்லும் இதிலிருந்து பிறந்த
சொல்லாகும்.
சிம்போனி
இசை பல இசை கருவிகளால்
இசைக்கப்பட்டாலும், அது
தரும் இனிய ராகம் கேட்போருக்கு
இன்பமளிக்கும். அதுபோல
அநேக கிறிஸ்தவ விசுவாசிகள்
சபைக்குள்
இருந்தாலும், அவர்கள் வேதாகம
வசனத்தின் வழி
நடத்துதலுக்கு இணங்கி
ஒற்றுமையாக "ஒரு மனதுடன்"
இயங்குவது கேட்போருக்கு
இன்பமளிக்கும், இனிய ராகத்துக்கு
சமம்.
மக்களை
இசை மகிழ்ச்சியாக்குவது போல், விசுவாசிகள் ஒரு மனதுடன் இருப்பது தேவனைப்
பிரியப்படுத்தும். தேவனும் அவர்கள் வேண்டுதலுக்கு உரிய பதிலளிப்பார்.
No comments:
Post a Comment