சீகன் பால்கு ஐயர் - 1682 – 1719
முழங்காலில் நின்று ஜெபத்தோடு வேத புத்தகத்தை மொழி பெயர்க்கத் தொடங்கினார் சீகன் பால்கு ஐயர். தமிழ் மக்கள் கையில் வைத்துப்
படிக்க ஆளுக்கொரு வேதப் புத்தகம் இல்லையே என்ற கவலை அவர் மனதை அழுத்தியது. சிறு வயதிலேயே
ஆஸ்துமா நோய் அவரைப் பிடித்திருந்தது. கடல் பயணத்தினாலும் அவருடைய நோய் அதிகப்படிருந்தது.
வேளாவேளைக்கு உணவும் இல்லை. தமிழை எழுதப் படித்தது எல்லாம் தரை மணலில் தான். சூழ்நிலையைப்பாராமல்
யேசுவுக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற பாரம் அந்த இருபத்தி நான்கு வயது இளைஞனை உந்தி
தள்ளியது
பிறப்பு :-
இளைஞன்
பற்தலோமேயஸ்
சீகன் பால்கு ஐயர் யாரென்று தெரியுமா? இந்தியாவிற்கு
வந்த முதல் புரட்டஸ்டான்டு மிஷனரி: இவர் 10-6-1682- ஆம் ஆண்டு ஜெர்மனியிலுள்ள புல்ங்ளிட்ஸ் என்னும் கிராமத்தில் பிறந்தார்.
இளவயதில்
ஏற்பட்ட துயரங்கள் :-
சிறுவனாக
இருக்கும்போதே அவரது தயார் மரணத்திற்கு ஏதுவான நோயுற்றார். அவர் தனது சிறு பிள்ளைகளை அழைத்து, "அன்புப் பிள்ளைகளே! நான் உங்களுக்குப் பெரிய செல்வத்தைச் சேர்த்து வைத்திருக்கிறேன்: அது பரிசுத்த வேதாகமத்தில் இருக்கிறது: அதன் ஒவ்வொரு பக்கங்களும் ஏன் கண்ணீரால் நனைத்திருக்கும். அதைத்தேடி வாசியுங்கள் என்று கூறிவிட்டு மரித்தார். தாயின் கடைசி வார்த்தைகள் சிறுவன் சீகன்
பால்குவின் மனதில் ஆழமாக வேரூன்றியது.
அன்பு அம்மாவை நேரில் பார்க்க முடியாவிட்டாலும், அவரது கண்ணீரால் நனைந்த வேதாகமப் பக்கங்களைச்
சிறுவயதிலேயே நன்கு படிக்கத் தொடங்கினார்.
சீகன்
பால்குவுக்கு ஆறு வயதாக இருந்தபோது அவர்கள் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் வீடு எரிந்துபோனது.
நோயுற்றுப் படுக்கையில் இருந்த தந்தையும் அந்தக் கவலையில் இறந்தார். அதே ஆண்டில் அவரது
ஒரு சகோதரியும் இறந்து போனார். அடுக்கடுக்காக வந்த துயரங்கள் அவரை ஆண்டவருக்கு நேராக
அதிகமாக வழிநடத்தின. அவரது மூத்த அக்கா அன்னாள் தாய் போல் அன்புகாட்டி, நன்முறையில்
அவரை வளர்த்து வந்தாள்.
ஹல்லே
பல்கலைக்கழகம் :-
தாயின்
வார்த்தைகள் எப்பொழுதும் அவர் மனதில் ரீங்காரமிட, இறையியல் கல்வி கற்க முடிவு செய்தார். கிரேக்கு, எபிரேயம், ஆங்கிலம், ஜெர்மானியம், இலத்தின்
ஆகிய மொழிகளைப் படித்தார். அதிக நேரம் படித்து தியானம் செய்ததால் அவருக்கு உடல் நிலை
பாதிக்கப்பட்டது. சீகன் பால்கு தனது இறையியல் கல்வியை புகழ்பெற்ற ஹல்லே பல்கலைக்கழகதில்
படித்தார். தேவ வசனங்களை மக்களின் மனதில் பதியும் வண்ணம் எட்டுரைக்கும் ஆற்றலை தேவன்
அவருக்கு அதிகமாகவே கொடுத்து இருந்தார்.
மிஷனரி
அழைப்பு:-
கிறிஸ்தவம்
திளைத்திருக்கும் ஐரோப்பாவில் நூறு ஆத்துமாக்களை ஆதாயப்படுவதை பார்க்கிலும், இயேசு
என்றால் யார் ஏறு கேட்கும் நாட்டிலுள்ள ஒரு ஆத்துமாவை ஆதாயப்படுத்துவதே சிறந்தது என்ற
கொள்கை, சீகன் பால்கு உள்ளத்தில் வெகுவாக கிரியை செய்தது. இந்த நேரத்தில் டேனிஷ் மிஷன் அவரை இந்தியாவிற்கு செல்ல அனுமதியளித்தது.
இவரோடு ஹென்றி புளுச்சோவும் தேர்ந்துதெடுக்கப்பட்டார்.
இந்திய மண்ணில் :-
1705-ஆம்
ஆண்டு நவம்பர் மதம் 29-ஆம் நாள் இருவரும் தாங்கள் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு சோபியா ஹெட்விக்கா என்ற கப்பலில் இந்தியாவிற்குப்
புறப்பட்டனர். ஏழு மதப் பயணத்திற்குப் பின் ஆப்பிரிக்காவிலுள்ள
நன்னம்பிக்கை முனையை அடைந்தார்கள். பின்னர் இலங்கை வழியாக 1706 - ஆம் ஆண்டு ஜூலை
9-ஆம் நாள் தரகம்பாடிக்கு வந்து சேர்ந்தனர்.
தரங்கம்பாடிக்கு "கிறிஸ்துவத்தின் தொட்டில்"
(Cradle
of Christianity) என்ற
பெயருமுண்டு.
தமிழ் கற்றல்:-
இவர்களின்
வருகை அங்குள்ள ஆளுநருக்கு விருப்பமில்லாதிருந்தது. தமிழ் மக்களுக்கு சுவிசேஷத்தை சொல்ல
வேண்டுமானால் தமிழ் கற்றாக வேண்டும் என்பதை உணர்ந்தார். தமிழ் கற்கத் தனிப் புலவரை
வைக்கவும், ஓலைச்சுவடிகளை விலைக்கு வாங்கவும் தேவையான பொருள்வசதி அவருக்கு இல்லை. எனவே
அவர் தரங்கம்பாடித் திண்ணைப்பள்ளியில் ஊர்ச் சிறுவர்களுடன் உட்கார்ந்து, மணலில் கைவிரலால்
எழுதிப்படித்தார். கர்த்தரின் கிருபையால் சில மாதங்களுக்குள் தமிழைக் கற்றுத் தேர்ந்தார்.
தரங்கம்பாடியில் ஏற்பட்ட
துன்பங்கள்:-
அந்நாட்களில்
சுவிசேஷத்தை அறிவித்ததின் நிமித்தம் அதிகாரிகளும், பிற மதத்தவரும் அவருக்கு மிகுந்த
துன்பத்தைக் கொடுத்தார்கள். மேலும் கிறிஸ்தவர்களாக மாறிய மக்களை உபத்திரவப்படுத்தினர்.
சீகன் பால்குவிற்கு தமிழ் கற்றுக்கொடுத்த ஆசிரியரை ஊரை விட்டு விரட்டினார்கள். டென்மார்க்கிலிருந்து
கப்பல் வழியாக இவர்களுக்கு அனுப்பப்பட்ட பணப்பெட்டியும் நீரில் மூழ்கியது.
வளர்ச்சிப்பணிகள்:-
அந்நாட்களில்
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சில மாணவர்களே படித்தனர். எனவே ஒரு ஆதரவற்றோர் விடுதியையும்,
பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். மாணவர்களுக்கு இலவச உணவு, உடை, உறைவிடம் அனைத்தையும்
கொடுத்துத் தாய்மொழியில் கல்விகற்க உதவினார். முதன்முதலில் பெண்கள் பள்ளியைத் தொடக்கியவரும்
இவரே. மாணவர்களுக்குச் சீருடைகளை அறிமுகப்படுத்தியவரும் இவரே. பல மதக் குழந்தைகளும்
இப்பள்ளிகளில் கல்வி கற்றனர். ஓர் ஆலயத்தைக் கட்டி, ஏழைக் கிறிஸ்தவர்களுக்கு உதவி செய்தார்.
பொருளாதார பற்றாக்குறை ஏற்பட்ட வேளைகளில் எல்லாம் கர்த்தரையே சார்ந்து கொண்டார்.
தமிழ் கற்பதில் தணியாத
ஆர்வம்:-
தமிழ்
கற்பதில் அதிக நேரத்தை செலவிட்டார்.
தினமும் தமிழ் கற்கும்
முறை:-
7-8
மணி வரை -கற்ற வார்த்தைகளைச் சொல்லிப்பார்த்தல்.
8-12
மணி வரை - தமிழ் புத்தகங்களைச் சத்தமாக வாசிப்பார். யாராவது ஒருவர் அதனைச் சரிபார்ப்பார்கள்.
12-1
சாப்பிடும்போது யாராவது தமிழ் புத்தகங்களை
வாசித்து காட்டுவார்கள்.
1-2
மணி வரை - சிறிய ஓய்வு எடுப்பார்.
2-3
மணி வரை - வீட்டில் போதகர்களுக்கு வகுப்பு எடுத்தல்.
3-5
மணி வரை - தமிழை வாசிப்பார்.
7-8
மணி வரை - வேறு யாராவது வாசித்துக் காட்டுவார்கள்.
இவ்வாறு ஐயமின்றி, கடுமையான பயிற்சி எடுத்துக்கொண்டு
தமிழைக் கற்ற பின்னர்தான் வேதாகம மொழி பெயர்பைத் தொடங்கினார். இவர் இந்தியரைப் போல,
தலையில் வெள்ளைத் தலைப்பாகை வைத்து, சட்டையின் மேல் சிவப்புக் கோடிட்ட அங்க வஸ்திரம்
தரித்து, காலில் செருப்புப் போட்டுக் கொண்டு செல்வார்.
தமிழில் வேதாகமத்தை மொழிபெயர்தல்:-
இந்திய
மொழிகளில் மட்டுமல்ல ஆசியாவிலேயே முதன் முதலில்
தமிழில் தான் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்டது. தினமும் முழங்காலில் நின்று தான்
மொழிபெயர்ப்பாராம். 1711 - ஆம் ஆண்டு புதிய ஏற்பாட்டை மொழிபெயர்த்து முடித்தார். பழைய
ஏற்பாட்டில் ரூத்தின் அதிகாரம் வரை மொழி பெயர்த்தார்
.
புதிய அச்சு இயந்திரம்:-
வேதகாமத்தைத்
தமிழில் மொழி பெயர்த்தபின் கையினால் எழுதி பிரதிகள் எடுக்கிறார்கள் என்பதைக் கேள்விப்பட்ட
இங்கிலாந்து மக்கள் புதிய அச்சு இயந்திரம் ஒன்றையும், அதனை இயக்குவதற்கு யோனா பின்கே என்ற ஜெர்மன் நாட்டு நிபுணரையும்
கப்பலில் அனுப்பினர். கிறிஸ்தவ அறிவுவளர்ச்சி
கழகத்தினர் இதனை அனுப்பினர். யோனா விஷக்காய்ச்சலால் வழியில் இறந்து போனார். எனினும்
ஒரு மாலுமி அப்பணியில் உதவி செய்தார். வேதபுத்தகம்,
காலண்டர், பாட்டுப் புத்தகங்கள் , ஞான உபதேச நூல்கள் ஆகியவை அச்சேற்றம் பெற்றன.
குறைந்த விலையில் நூல்களை வெளியிடுவதற்காக தரங்கம்பாடியில் ஒரு காகிதத் தொழிற்சாலையும் தொடங்கப்பட்டது. சீகன்பால்கு
அச்சிட்டு வெளியான நூல்களைப் படித்த பலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டனர். அவருக்குத் தமிழ்
கற்றுக்கொடுத்த அவரது குருவின் மகன் கனபாடி உபாத்தியாயர் கிறிஸ்தவராக மாறினார்.
தாயகத்திற்குத் திரும்புதல்
:-
1715
- ஆம் ஆண்டு டென்மார்க்குக்குத் திரும்பிச் சென்ற சீகன்பால்கு ஐயர், தரங்கம்பாடி ஊழியத்தைப்
பற்றி மன்னரிடம் எடுத்துக் கூறினார். ”தரங்கை
நற்செய்தி இயக்கத்தின் தலைவர் “என்ற பட்டத்தை மன்னர் சீகன்பால்குவிற்குச் சூட்டினார்.
தரங்கையிலுள்ள அதிகாரிகளால் ஒடுக்கப்பட்டதை அறிந்த மன்னர், நற்செய்திப் பணியின் காரியங்களைக்
கவனிக்கத் தனிக் குழுவையும் ஏற்படுத்தினார். நொந்துபோயிருந்த சீகன்பால்குவிற்கு இது
அதிக மகிழ்ச்சியை அளித்தது.
திருமணம் :-
சீகன்பால்கு
பின்னர் தான் கற்ற ஹல்லே பல்கலைக்கழகத்திற்குச்
சென்று தரங்கை ஊழியத்தைப் பற்றி விளக்கினார். 1715 - ஆம் ஆண்டு ஹல்லேயிலுள்ள மரியா டாரதியா சால்ஸ்மன் என்பவரைத் திருமணம்
செய்தார். இங்கிலாந்து நாட்டு மன்னர் முதலாம்
ஜார்ஜ் - ம், மக்களும் அவரது ஊழியத்தைப் பற்றி அறிந்து மிகுந்த ஆதரவு அளித்தனர்.
1716 - ஆம் ஆண்டு மார்ச் மாதம் தரங்கைக்குத்
திருப்பி வந்த சீகன்பால்கு தம்பதியரை மக்கள் உற்சாகமாய் வரவேற்றனர்.
புதிய எருசலேம் ஆலயம்
:-
சீகன்பால்கு
கிராமம் கிராமமாகச் சுற்றி நடந்து சுவிசேஷத்தைப் பிரசங்கித்து வந்ததால் ஏராளமான மக்கள்
இயேசுவை ஏற்றுக்கொண்டனர். தரங்கம்பாடியில் 1707 -ஆம் ஆண்டு கட்டிய ஆலயத்தில் இட நெருக்கடி
ஏற்பட்டதால் 1717 - ஆம் ஆண்டு புதிய ஆலயத்திற்கு அஸ்திபாரம் போடப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்குள்
புதிய எருசலேம் என்ற ஆலயம் கட்டி முட்டிக்கப்பட்டது.
பலவித அலைச்சல்களுக்கிடையே சீகன்பால்குவின்
உடல்நிலை மிகவும் மோசமாகியது. இந்நிலையில் அவருக்கு உதவியாக இருக்க கிரிண்லர், ஜோர்டன், போவிஸ் என மூன்று மிஷனரிகள்
ஜெர்மனியிலிருந்து வந்தனர்.
புதிய
எருசலேம் ஆலயத்தைக் கட்டி முடித்ததும் பழைய ஆலயத்தை மிஷன் வீடாகப் பயன்படுத்தினர்.
புதிய கிறிஸ்தவர்களைக் கிறிஸ்தவப் பராமரிப்பில் பேணிப் பாதுகாக்க ஓர் இறையியல் பயிற்சிக் கூடத்தையும் நிறுவினார்கள்.
நோயும் மரணமும்:-
நற்செய்திப்
பணிக்காக வந்த சீகன்பால்கு ஐயர் பள்ளிக்கூடங்களைத் தொடக்கியதால் டென்மார்க்கிலுள்ள
அவரது ஆதரவாளர்கள் தங்கள் உதவியை நிறுத்தத் தொடங்கினார்கள். தரங்கை அதிகாரிகள் கொடுத்த
துன்பங்களும், தீராத வயிற்றுவலியும், ஆஸ்துமா நோயும் எப்பக்கமும் அவரை நெருக்க அவரது
உடல் நலம் குன்றியது. 1719 - ஆம் ஆண்டு பிப்ரவரி
10 - ஆம் நாள் கிரிண்லர் மிஷனரியிடம் அத்தனைப் பொறுப்புகளையும் ஒப்படைத்தார். பிப்ரவரி 23 - ஆம் தேதி மிஷனரிப் பணியில் தோள்கொடுத்து,
அன்புத் துணையாக மூன்றாண்டுகள் வாழ்ந்த மனைவி டாரதியையும் இரு குழந்தைகளையும் விட்டுப்
பிரிந்து விண்ணகம் சென்றார். தரங்கம்பாடி எருசலேம் ஆலயத்தினுள் அவர் உடல் நல்லடக்கம்
செய்யப்பட்டது.
சீகன்பால்குவின் தமிழ்த் தொண்டு :-
சீகன்பால்கு
ஐயர் தமிழைக் கற்கும்போதே அகராதிப்பணியையும் தொடங்கினார். 2 ஆண்டுகளுக்குள் 20000 சொற்கள் அடங்கிய ஒரு தமிழ் அகராதியை உருவாக்கினார்.
தமிழ் இலக்கண நூலையும் எழுதியதோடு, ஜெர்மன் மொழியிலுள்ள சில சிறந்த நூல்களைத் தமிழில்
மொழிபெயர்த்தார்.
இந்திய
மக்களுடன் நெருங்கிப் பழகுவதிலும் தமிழ்ப் புலமையிலும், திருமறை மொழி பெயர்ப்பில் சீகன்பால்கு
காட்டிய ஈடுபாட்டிலும் அவருக்கு நிகரானவர்கள் வேறு இல்லை என கிரிண்லர் ஐயர் பாராட்டினார். இந்திய மக்களின் கலாசாரத்தை அடிப்படையாக
வைத்து "தென்னிந்திய சமுதாயம்"
என்ற நூலை அவரது கைப்பட எழுதினார். 122 தமிழ் ஓலைச் சுவடிகளைச் சேர்த்து வைத்திருந்தார்.
தமிழில் 14 புத்தகங்களை எழுதினார். "மலபார்
அகராதி" என்ற புத்தகத்தையும் வெளியிட்டார். ஜெர்மன் மொழியிலுள்ள பல ஞானப்பாடல்களை
மொழிபெயர்த்து வெளியிட்டதோடு தமிழில் கர்நாடக இசைப் பாடல்களையும் எழுதினார். இந்திய
மக்களைப் போலவே உடையணிந்தார். அவரது திருமண வரவேற்பின் போது தமிழில் நன்றி கூறினார். பயணங்களில் தமிழ் மறந்து போகாமல் தொடர்ந்து படிக்க
மலையப்பன் என்பவரை உடன் அழைத்துச் செல்வார்.
இந்தியவியலின் தந்தையென்று தமிழுலகம் அவரைப்
பாராட்டுகின்றது.









அருமை
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteஅருமை
ReplyDeleteஇயேசுவின் நாமத்தை பரப்பிய அவருடைய பாதத்தில் விழுந்து நன்றி சொல்ல வேண்டும்
ReplyDeletetamil meethu neengal konda patru viyakavaikirathu.. missionaryaaga neengal seitha iraipani tamilargalagiya engalai migavum aachariya pada vaikirathu... migavum nandri...
ReplyDeleteSuper. Very useful information
ReplyDeleteAvarudaiya brinting press which place pastor?
ReplyDeleteஇவருக்கு ஐயர் என்ற அடை மொழி எப்படி வந்தது என்று யாரவது சொல்ல முடியுமா?
ReplyDeleteஇந்துக்களை ஏமாற்றி மதம் மாற்ற தனக்குதானே அடைமொழிய வைத்துகிட்டான் மதவியாபர பாதிரி
DeleteSo great, rare msg, God bless.
ReplyDelete