வேதாகமத் துணுக்குகள்
Bible Tips
ஏரோதுக்கள்
வேதத்தில் குறிப்பிட்டுள்ள "ஏரோது" என்ற பதம் தனி ஒரு மனிதனை குறிக்கும் பதமல்ல. ரோமர்களின் ஆட்சியின் கீழ் ஆண்ட "இதுமேய" சந்ததியினரே ஏரோதுக்கள்"என்றழைக்கப்பட்டனர். பூர்வத்தில் ஏரோதின் வழித்தோன்றல்களாகிய இவர்கள், கி.மு.125யில் ஹிற்கானஷிற்கு கீழ்ப்பட்டிருந்த காலத்தில் யூத மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள். முதலாம் ஏரோது கி.மு.41-இல் யூதாவின் ஆளுநரானார். அவருக்கு பின் அர்கெலாயு, அந்திப்பா, பிலிப்பு, இரண்டாம் பிலிப்பு, அகரிப்பா, இரண்டாம் அகரிப்பா, அரிஸ்தோபுலு என்ற 8 ஏரோதுக்களை வேதம் கூறுகிறது. அவர்களில் "அந்திப்பா" ஏரோதுதான் முறையற்ற திருமணத்தின் நிமித்தம், யோவான் ஸ்நானகனால் கடிந்து கொள்ளப்பட்டு, பின் யோவானை கொலை செய்தவன். பின் நாட்களில் இயேசுவை விசாரித்தவனும் இவனே.
கிரேக்கர்கள்:-
கிரேக்கு என்ற பதம் " கிரேக்கி" (CRECCE) என்ற பதத்தில் இருந்து வந்தது. கிராக்கி என்பது, அட்ரியாடிக் குடாக் கடலருகில் வசித்த ஒரு இன மக்களின் பெயர். இந்த மக்கள் சின்ன ஆசியாவின் மேற்கிலும், அதனை ஒட்டியுள்ள ஐயோனி தீவுகளிலும் குடியிருந்தனர். இத்தீவிலிருந்த கிரேக்கியர், ஐயோனியர் என்றும் அழைக்கப்பட்டனர். பழைய ஏற்பாட்டில் கிரேக்க தேசம், யாவான் என்றழைக்கப்படுகிறது. (ஆதி 10:4, எசே 27:13). இதுவும் ஐயோனி என்ற பதத்தில் இருந்து பிரிந்த
கின்னரேத் கடல் :-
கின்னரேத் கடல் எங்கே இருக்கிறது தெரியுமா? இஸ்ரவேல் தேசத்தில் தான். வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கலிலேயா கடலின் பெயர் தான் கின்னரேத் கடல் (எண் 34:11). இந்த கின்னரேத் என்ற பதம் எபிரேய கொம்பு வாத்தியமான கின்னரேத்திலிருந்து வந்தது. அதற்கான கரணம் கடல் என்று சொல்லப்படும் கின்னரேத் கடல் உண்மையில் கடல் அல்ல. அது ஒரு ஏரி, அது கொம்பு வடிவத்தில் அமைந்துள்ளது. இது இன்னொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது. இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் இந்த கடல் கெனசரேத்து என்று அழைக்கப்பட்டது (லூக்கா 5:1)

No comments:
Post a Comment